வடமேல் மாகாண கடலோர பகுதிகளில் வலைகளில் ஜெல்லிமீன்கள் சிக்குவதால் மீனவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
வடமேல் கடற்பகுதியில் இந்த நாட்களில் ஜெல்லிமீன் இனங்கள் அதிகமாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்..
நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீனைத் தொட்டால் உடலில் அரிப்பு, வீக்கம் ஏற்படுவதுடன், காயங்களும் ஏற்படுவதாகவும், மிகவும் வேதனையான சூழல் நிலவுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெல்லி மீன்கள்
மாரவில வளைகுடாவில் அதிகளவான ஜெல்லிமீன்கள் வலையில் சிக்குவதால் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடற்கரையில் விளையாடுபவர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.