தமிழகம் முழுவதும் அரிசியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அரிசி விலை
மிக்ஜாம் புயல் மழை, வெள்ளம் காரணமாக விளைச்சல் குறைந்ததும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளது.
அண்டை மாநிலங்களில் நெல் வரத்து குறைவால், ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு நெல் மற்றும் அரிசியை வாங்கிச் செல்கின்றனர்.
என்ன காரணம்?
இதன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது.
நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சையில், ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் 26 கிலோ சிப்பம் ரூ.100 முதல் ரூ.150 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், ஆந்திரா பொன்னி, பிரியாணி அரிசிகளின் விலையும் அதிகரித்துள்ளது.