பொதுவாக வீடுகளில் இஞ்சி கறிகளுக்கு போடுவதற்காக அதிகமாக வாங்குவார்கள்.
ஏனெனின் இஞ்சி கறிகளுக்கு போடுவதால் சுவை மற்றும் நறுமணம் கொடுக்கும். இவற்றை தாண்டி இஞ்சியை கறிகளுக்கு பயன்படுத்துவதால் நிறைய ஆரோக்கிய பலன்களும் கிடைக்கின்றன.
மேலும், இஞ்சியில் இருக்கும் சில பதார்த்தங்கள் தீரா சளி பிரச்சினைக்கு எதிராக போராடுகின்றது.
அத்துடன் இஞ்சி பயன்பாட்டினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான தெளிவான விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
இஞ்சி + தண்ணீர்
1. இதய ஆரோக்கியத்தில் பிரச்சினையிருப்பவர் இஞ்சியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
2.ரத்த நாளங்களை திறக்க இஞ்சி தண்ணீர் உதவியாக இருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
3. இஞ்சி டீ அடிக்கடி குடித்து வந்தால் வாதத்தை தூண்டி தேவையற்ற சில விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இஞ்சியை எடுத்து கொள்ளும் போது உலர்ந்த இஞ்சியை தேர்வு செய்து பயன்படுத்துவது சிறந்தது. தேநீருடன் அல்லாமல் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
4. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் உப்புசத்தை போக்க இஞ்சி உதவியாக உள்ளது. செரிமான அமைப்பில் கோளாறுகள் ஏற்படும் போது இஞ்சி கலந்த தண்ணீர் குடிப்பது சிறந்தது.
5. சிலர் அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். இப்படியான நேரங்களில் இஞ்சி தண்ணீர் கைக் கொடுக்கும். இது பசியை கட்டுபடுத்தும். அத்துடன் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.