நொச்சியாகம பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 34 வயது தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனியாக நொச்சியாகம பொலிஸ் நிலையத்துக்கு சென்று தந்தை தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி வருவதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நொச்சியாகம பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.