நடிகை நக்மாவை தமிழ் சினிமாவில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில் கவர்ச்சி குயீனாக சினிமாவில் வலம் வந்தவர் அவர்.
ரஜினி, சத்யராஜ், கார்த்திக் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் குதித்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்.
திருமண ஆசை
நக்மாவுக்கு 49 வயதாகும் நிலையில் தற்போது வரை திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். அது பற்றி அவர் பேட்டியில் பேசிய விஷயம் வைரல் ஆகி வருகிறது.\
எனக்கும் திருமணம், குழந்தை என வாழ ஆசை தான், நடக்கிறதா பார்க்கலாம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.