சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் நேற்று (30.1.2024) ஜின்ஜியாங் உய்கா் – அக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவாகி உள்ளது.
பூமிக்குக் கீழே 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 2 வாகனங்களில் 10 உறுப்பினா்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் தகவல் வெளியாக வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.