யால வனப்பகுதியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
யால வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கஞ்சா பயிர்ச்செய்கை பராமரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், அங்கு 21,260 காய்ந்த கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் பெறுமதி அறுபது இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.