தற்போதைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சினையாகும்.
உடல் எடை அதிகரிப்பானது நாம் உண்ணும் உணவு, நித்திரை கொள்ளும் நேரம், செய்யும் வேலை என பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது.
உடல் எடையை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் செய்முறைகளினால் பாரிய பாதிப்பும் ஏற்படுகின்றது.
சுடு நீர் குடித்தல்
இயற்கையாக எளிமையாக எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என பார்க்கலாம்.
தினமும் காலையில் சுடு நீர் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும் என கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க, உடலில் நீர்சத்தினை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.
சுடு நீரின் நன்மைகள்
தண்ணீர் இயற்கையாகவே உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறது. மேலும், தண்ணீர் நமது உடலில் உள்ள சக்திகளை பாதுகாக்கவும் தேவையில்லாத கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது.
உடலில், உள்ள தேவையில்லாத கழிவு பொருட்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றுவதில் சுடு தண்ணீர் உதவுகிறது. சுடு தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
இதனால், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகள் கரையும். சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதனால் உடல் எடை குறையலாம். இவ்வா தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.