வட்டி விகிதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது.
நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில், 9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.