பொதுவாக பழ வகைகள் அனைத்திலும் நிறைய வகையான சத்துக்கள் உள்ளது. அத்தகைய சத்துக்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயனளிக்கக்கூடியதாக உள்ளது.
அதிலும் பெரும்பாலும் குழந்தைகள் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். அப்படி நாம் சாப்பிடும் பட்சத்தில் அனைத்து பழங்களையும் சாப்பிடுவது இல்லை.
பழம் கொஞ்சம் அழுகிய நிலையில் இருந்தாலோ அல்லது கருப்பாக இருந்தாலோ அவற்றை நாம் சாப்பிடுவதற்கு யோசிப்போம்.
அந்த வகையில் வாழைப்பழத்தோலின் மேலே சில கரும்புள்ளிகள் இருக்கும். அத்தகைய கரும்புள்ளிகள் இருக்கும் பழத்தினை சாப்பிடலாமா அல்லது சாப்பிடக்கூடாதா என்ற குழப்பம் இருந்து வருகிறது.இதற்கான சரியான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கரும்புள்ளிகள் இருந்தால் சாப்பிடலாமா?
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஒரு வாழைப்பழம் பொதுவாக பழுக்க வைக்கும் செயல்முறையின் தொடக்கத்தில் மஞ்சள் நிறமாக இருக்கும். இறுதியில் பழத்தில் அதிகமாக உற்பத்தியாகும் எத்திலீன் காரணமாக மஞ்சள் நிறமிகளில் பழுப்பு அல்லது கருப்பு புள்ளிகள் உருவாகின்றது.
இந்த செயல்முறை நொதி பிரவுனிங் எனப்படுகிறது. பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தில் உள்ள கரும்புள்ளிகள், புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் ஒரு பொருளான ட்யூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர்(TNF) அதிக அளவில் இருப்பதை குறிக்கிறது.
இந்த TNF ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியையும், ரத்த வெள்ளை அணுக்களையும் அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு கரும்புள்ளிகள் உள்ள பழுத்த வாழைப்பழம் புற்றுநோயை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழத்தில் சோடியம் குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். மேலும் இது எலும்புகளை வலுப்படுத்துதல், இரத்த சோகையை தடுத்து நிறுத்துதல், மனநிலை மாற்றத்திற்கு உதவுதல் மற்றும் உடனடி ஆற்றலை கொடுப்பது போன்ற பல நன்மைகளை கொண்டுள்ளது.
எனவே வாழைப்பழத்தோலில் கரும்புள்ளிகள் இருந்தால் சாப்பிடலாம். அதாவது வாழைப்பழத்தில் உள்ள கருப்பு புள்ளிகள் பொதுவாக பழம் பழுத்திருப்பதை குறிப்பதாகும்.
கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்கள் சற்று இனிப்பானவை. இந்த கரும்புள்ளிகள் பாலிஃபீனால் ஆக்சிடேஸ் என்ற நொதியால் ஏற்படுகிறது. இதனை உண்பது பாதுகாப்பானது.