குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

புதிய இணைப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மேலும் 300,000 குடும்பங்களை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முதலாம் இணைப்பு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த தகவலை மனித உரிமை ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முறைப்பாடுகள்

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் தனிநபர்களாலும் அமைப்புகளாலும் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை தகுதியான குழுக்களுக்கு சலுகை வழங்கப்படாமை மற்றும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இந்த நலன்புரி உதவித் திட்டம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதா என விசாரணை நடத்தப்படும் என்றும் நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.