சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் இனவாத கருத்துக்களை விதைக்க ராஜபக்ச ரெஜிமென்ட் தயாராகி வருகிறது.
மக்கள் மத்தியில் இழந்துள்ள தமது செல்வாக்கை சரிசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.
இதற்கமைய கிராம மக்களை இலக்கு வைத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
தப்பான அபிப்பிராயங்கள்
இதற்கனை ஒழுங்குபடுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் தேர்தலை வெற்றிக் கொள்வது தமது இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக மக்கள் மத்தியில் ராஜபக்சர்கள் மீதான தப்பான அபிப்பிராயங்கள் மற்றும் வெறுப்புணர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்து வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன கட்சி வெற்றி பெறும். ஜனாதிபதி தேர்தலில் பொருத்தமான வேட்பாளர் ஒருவர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.