தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கம், பொதுமக்களின் பணம் வீணடிக்கபடுவதை நிறுத்தும் என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதியின் பாரிய பாதுகாப்பையும் அரசியல்வாதிகள் பயன்படுத்தும் விலையுயர்ந்த வாகனங்களையும் ஒழிக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அம்பாந்தோட்டை மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு
“ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கிராம அளவில் உள்ள காவல் நிலையங்களில் 10 பொலிஸார் மட்டுமே உள்ளனர்.
இந்தநிலையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு படைகளை கிராமங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பபுவோம்
ஜனாதிபதியும் ஏனைய அரசியல்வாதிகளும் விலையுயர்ந்த வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அழிவுகரமான ஆட்சி
அவை ஒரு லிட்டருக்கு இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர்கள் மட்டுமே ஓடுகின்றன.
இதுபோன்ற விலை உயர்ந்த வாகனங்களை பயன்படுத்துவது தமது ஆட்சியில் நிறுத்தப்படும்.
இந்தநிலையில் எதிர்காலத் தேர்தல் ஒரு அரசியல் கட்சிக்கு வாக்களித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான மற்றுமொரு தேர்தல் மட்டுமல்ல, ஊழல் மற்றும் அழிவுகரமான ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான போராட்டமாக இது இருக்கும்.
வெள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்டது போல் இதுவும் சுதந்திரப் போராட்டமாக இருக்கும்.
அத்துடன் ஆட்சியை கைப்பற்றுவது தமது போராட்டத்தின் முடிவாக இருக்காது.
அது நாட்டை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் தொடக்கமாக காணப்படும்” என்றார்.