சமூக ஊடகங்கள் மூலம் மத போதனைகளை வழங்கி உயிரை மாய்க்க தூண்டியதாக கூறப்படும் ருவான் பிரசன்ன குணரத்னவின் ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது இரகசியப் பொலிஸ் பிரிவின் இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் 15 அதிகாரிகள் கொண்ட இரண்டு குழுக்களால் நாடு முழுவதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் உயிரை மாய்த்துக்கொண்ட ஏழு பேரின் மருத்துவப் பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறது, மேலும் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களும் இந்த விசாரணைக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
பொலிஸ் குழு
மேலும், இந்த நபரின் போதனைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற மற்றைய பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரனைக்கமைய, இறந்த நபருக்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள், சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் எந்தெந்த மாகாணங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்படவுள்ளது.
சமீபத்தில் பதிவான ஏழு சந்தேக மரணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்த ஏழு பேரும் அதே விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதால், இந்த விஷத்தை குறித்த போதனைகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகித்தாரா என்ற சந்தேகத்தில் இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.
தீவிர விசாரணை
மேலும், உயிரிழந்தவரின் வழியை பின்பற்றி அவரை பின்பற்றுபவர்கள் தொடர்ந்து இதுபோன்ற விரிவுரைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய இந்த விசாரணைகள் நடத்தப்படும்.
இந்த தற்செயலான உயிரை மாய்க்கும் அலையாக மாறுவதைத் தடுக்க இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.