பெப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வரி அடையாள இலக்கம் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, வரி அடையாள இலக்கம் இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வரி அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இலக்கத்தை பெற்றுக்கொண்டே மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை நாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில், வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கான சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.