நாட்டில் உணவு தயாரிப்புக்களுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மானிய முறையில் வழங்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வட் வரியினால் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உணவு வகைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் மதிய உணவுப் பொதி, தேநீர் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், உணவு தயாரிப்புக்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்