இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதியில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (29) அதிகாலை இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன, அதில் ஒன்று ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் 5.8 ஆகவும் பதிவானது.
எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கங்களால் இந்நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை எனவும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.