நாடளாவிய ரீதியில் ச.தொ.ச விற்பனை நிலையத்தினால் 06 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த விலை குறைப்பு இன்று(28.12.2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்) 55 ரூபாவாலும் , ஒரு கிலோஉருளைக்கிழங்கு 5 ரூபாவாலும் ஒரு கிலோ சிவப்பு பருப்பு 1ரூபாவினாலும் ,வெள்ளை நாடு 1 ரூபாவினாலும் குறைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதன்படி டின் மீன்(425 கிராம்) புதிய விலை 475.00 ஆகவும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் புதிய விலை280.00 ஆகவும் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் புதிய விலை 309.00 ஆகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.