கடந்தவாரம் கண்டி வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் கம்பஹாவில் மீண்டும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது மரணத்துக்கான காரணம் கொவிட்-19 நிமோனியா என தெரியவந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் ஒருவர் கொராவால் உயிரிழப்பு
யக்கல பிரதேசத்தில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின்போது, அவர் கொவிட் -19 நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உயிரிழந்தவரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை கடந்த ஒரு வருடமாக இலங்கையில் கொரோனா மரணம் எதுவும் பதிவாகாத நிலையில் தற்போது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.