2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்க 99% வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO – World Metorological Organisation) அறிவித்தது.
புவி வெப்பமயமாதலைத் தடுக்க அவசரமாக உரிய நீடித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐ.நா. காலநிலை பாதுகாப்பு இயக்கங்கள், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்ற கணிப்பு கவனம் பெற்றது.
இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்க 99 சதவீத வாய்ப்புள்ளதாக இன்னொரு அறிக்கை வெளியாகியுள்ளது.
இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பரீஸ் பருவநிலை ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டு, அந்த ஒப்பந்தமானது 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது.
பரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டன.
உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக வரையறுக்கப்பட்டது.
ஆனால், ஒக்டோபர் 2023-ன் முடிவடைந்த காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சர்வதேச சராசரி வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டின் சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணித்துள்ளது.
கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட ’பெர்க்லி எர்த்’ அமைப்பு இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், எல் நினோ ஆண்டில் கடல் மேல்பரப்பு வெப்பமாவது நடக்கும் என்றாலும் இந்த ஆண்டு வெப்பமடைதல் ஆச்சரியமளிக்கும் வகையில் நடந்துள்ளது.
அதனால் சராசரி ஆண்டு வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் என்று 1850-1900 சராசரியைவிட அதிகரிக்கும் என்று கணிக்கிறோம்.
இதற்கான வாய்ப்பு 99 சதவீதம் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.