இந்தியாவின் இசை மகுடத்தை சூடிய கில்மிஷா மென்மேலும் வளரவேண்டும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாழ்த்து.
இந்தியாவின் இசை மகுடத்தை சூடி எமது நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கில்மிஷாவுக்கு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘‘சரிகமப’’ சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் கில்மிஷா தனது திறமையை வெளிக்காட்டி முதலிடத்தை தட்டிக்கொண்டமை எமது நாட்டுக்கு பெருமையாகும்.
குறிப்பாக யாழ். மண்ணின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிய கில்மிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது ஆற்றல் மென்மேலும் வளரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.