விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் உலகு அறிந்ததே அது குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லை!

விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும் – அவர் தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு.
வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத நிர்வாக ஞானமற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தான் முன்வைத்த தீர்வு என்ன என்பதை முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
விக்னேஸ்வரன் தான் சமர்ப்பித்திருந்த விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தவில்லை ஆகவே தான் ஜனாதிபதி அழைத்து சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தன்னுடைய திட்டங்களை நாடாளுமன்றில் பிரேரணையாக சமர்ப்பித்து அது விவாதிக்கப்பட்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு பொறிமுறை என்பது அவர் அறியாத விடயமல்ல.
தான் தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை ஜனாதிபதியிடம் கொடுத்தவிட்டேன் அதை அவர் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது நொண்டிச்சாட்டு என்பதுடன் அவரிடம் தமிழ் மக்கள் தொடர்பான தெளிவான அரசியல் நிலைப்பாடு இல்லை என்பதையும் இது எடுத்துக்காட்டுகின்றது.
உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் அக்கறை இருக்குமாக இருப்பின் அவர் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு தன்னுடைய நிலைப்பாடடை வலியுறுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து ஜனாதிபதியிடம் அன்று கொடுத்தேன் இன்று கொடுத்தேன் அவர் நடைமுறைப்படுத்தவில்லை என கூறுவதும் ஒரு நகைப்புக்குரியது.
வடக்கின் முதலமைச்சராக இருந்தபோது இவர் எவ்வாறு திறனற்றவராக ஒரு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத ஆளுமையற்றவராக இருந்தவர் என்பதும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆதேபோன்று ஆற்றலும் அனுபவமும் நிர்வாக ஞானமும் இல்லாத விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைமூலம் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் என்ன என்பதையும் இந்த உலகே அறியும். அவ்வாறிருக்கும்போது தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்தால் தான் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தயார் எனவும் சூழுரைத்துள்ளார்.
ஆகவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் விக்னேஸ்வரனிடம் எந்தவிதமான திட்டமும் இல்லாதவிடத்து இவ்வாறான சாக்குப்போக்கை சொல்லித்தான் கூட்டங்களை தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் விக்னேஸ்வரன் நிர்வாக ஞானம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இந்த உலகே அறியும். ஆகவே அது தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்த