கிளிநொச்சியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
இதன் காரணமாக ஏராளமான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று விசேட விடுமுறை
இதேவேளை தருமபுரம் பகுதியில் உள்ள பாடசாலை சிலவற்றுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் பிரதேச செயலகம் ஊடாக சேகரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


