பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 150,000 அதிகாரிகள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 80,000 க்கும் குறைவான அதிகாரிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் சேவைக்கு உரிய ஆட்சேர்ப்பு இல்லாததாலும், உயர் அதிகாரிகளின் கவனத்தைப் பெற முடியாமலும் பல உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகிச் செல்லும் பின்னணியிலேயே இது இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதி போக்குவரத்து பொலிஸ் முதல் உயர் அதிகாரிகள் வரை தொடர்ந்து அநாவசிய செல்வாக்கு நடைபெற்று வருவதுதாக தெரிவிக்கப்படுகின்றது.
36 வருடங்களாக பொலிஸ் சேவையை நேசித்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கடமையின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மரணம் தற்கொலை என கூறப்பட்டாலும், இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.