குழந்தைகளுக்கான போஷாக்கு உணவு, உரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவற்றுக்கு VAT வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சு எதிர்பார்ப்பதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கு VAT இல் இருந்து விலக்கு அளிக்குமாறு தனது குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
பாராளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
ஏராளமான விவசாயிகள் மீது VAT விதிக்கப்பட்டுள்ளது. மிகச் சிலரே VAT வரியில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வரி வருவாய் இன்றியமையாதது என்று அரசு கூறுகிறது. ஆனால் வரி விதிப்பில் நியாயம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். இப்போது டீசலுக்கும் VAT விதிக்கப்பட்டுள்ளது.