மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி குறித்த பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி நிலையால், தென்மேற்கு பகுதியில் மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வடக்கு கடலோரப் பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.