பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது. நேற்று (03) அண்மையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் Ministry of Trade & Commerce மற்றும் Ministry of Primary Industries தொடர்பில். உளுந்து, கௌபி போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தடையினால் உளுந்து தற்போது 1Kg ரூபா 1,600 ஆக சந்தைப்படுத்தல் விலையாக உள்ளது. ஆனால் இதனை இறக்குமதி செய்வதாக இருந்தால் வரி அனைத்தும் சேர்க்கப்பட்டு இந்த விற்பனை விலையை ரூபா 600.00 ஆக மாற்ற முடியும்.
கூடுதலாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களே அதிகம் உளுந்தினை பயன்படுத்துகின்றனர். இந்த விலையினை குறைப்பதற்கு விவசாய அமைச்சர் உளுந்து, கௌபி இறக்குமதி செய்ய 17 பேருடைய பெயரைக் கொண்டதான ஒரு அனுமதியை வழங்கியுள்ளார். இறக்குமதியை அனுமதிக்கும் போது இவற்றின் விலையினைக் குறைக்க முடியும். ஆனால் இன்னும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு வாரத்தினுள் அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி – ஜூலை மாதம் வரை இலங்கைக்கு தேவையான சீனி கடந்த வருடத்தை 60% அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் நவம்பர் மாதம் சீனிக்கான வரிச் சலுகை நீக்கப்படுகின்றது என்பதனை அறிந்ததனால் ஆகும். ஊழல் மோசடிகள் நடைபெறுகின்றன. இதனால் இலங்கைக்கு 2 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது.
திருகோணமலை புல்மோட்டை, வாகரை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மக்களின் விருப்பத்தினை மீறி கனிய வள அகழ்வினை மேற்கொள்கின்றனர். வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும் எனக் கூறினாலும் உண்மையில் பிரதேச வளங்களை சூறையாடி அவ் இடங்களை பாலைவனங்களாக மாற்றும் நடவடிக்கையாகவே இவை அமைகின்றன. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கு அமைச்சர் தனக்கு இதனைப் பற்றி எதுவும் தெரியாது எனவும், அவ்வாறு ஏதும் அறிந்தால் அதனை தனக்கு தெரியப்படுத்தும் படியும் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் காகிதங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என கூறினார். அவருடைய பிரதேசமான வாழைச்சேனையில் காகித தொழிற்சாலை உள்ளது. அதனை முறையாக செயற்படுத்தி காகிதங்களை இலங்கையிலேயே உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதனை மேற்கொள்ளாது காகித இறக்குமதி தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதென்பது பயனற்றது.
அண்மையில் கைதான போதகர் ஜெரோம் பெர்ணான்டோ ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த ICCPR சட்டம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களுக்கும், எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களுக்கும் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது. அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் அவர்கள் “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்” என்பதற்கு ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை? போதகருக்கு ஒரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டமா? என தெரிவித்தார்.