பங்களாதேஷில் 5.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று(02) காலை 09.05 மணியளவில் 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்பட்ட பாதிப்புகள்
பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் இந்நிலநடுக்கம் உணரப்படிருப்பினும், இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் இதற்கு முன்னரும் அக்டோபர் 2 ஆம் திகதி 5.4 ரிச்டர் அளவில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.