டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாக்ஸ் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது.
இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்ததோடு, விரைவில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கிரேக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது.