தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாக்கம் காரணமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ்நில கிராமங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது.
நேற்று (13) காலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அன்றாட செயற்பாடுகளை செய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையும் காணப்படுவதுடன் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளது.
பல வீடுகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் பட்சத்தில் தாழ்நில கிராம மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.