8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.