தையிட்டி நாக தம்பிரான் கோவிலில் சைவ முறைப்படி பொங்கலிட்டு, பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது இந்த ஒலியானது அருகில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையின் பிரித் ஓதுதலுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் பாடல் ஒலிப்பதை நிறுத்துமாறும் காவல்துறையினர் மக்களோடு முரண்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு நின்றிருந்த மூத்த சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், சட்ட விரோத விகாரையின் பிரித் ஓதும் ஒலியை நிறுத்தும்படி கூறி, காவல்துறைக்கு விளக்கமளித்ததையடுத்து பிரித் ஓதும் ஒலி நிறுத்தப்பட்டு நிலைமை சீரானதாக தெரிவிக்கப்படுகிறது.