வெப்ப மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்துகின்றது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும்தொடரும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மட்டக்களப்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கொழும்பு – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காலி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
யாழ்ப்பாணம் – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
கண்டி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நுவரெலியா – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இரத்தினபுரி – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மன்னார் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்