காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப பாடசாலையில் 05 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி, பொலிஸார் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி குறித்த பாடசாலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக இது தொடர்பான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை ஆஜர்படுத்திய பின்னர் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.