ஒக்டோபர் மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மின்சார சபை மேற்கொண்ட அனுமானங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான சமீபத்திய தரவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கு நாளொன்றுக்கு 44.70 ஜிகாவோட் மணிநேர மின் தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டாலும், உண்மையான தேவை 41.01 ஜிகாவோட் மணிநேரம் என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் நிலக்கரியின் விலை 68.60 ரூபாவிலிருந்து 52.60 ரூபாவாக குறைந்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள கோரிக்கையை குறைந்தபட்ச தரவுகளை கொண்டு உறுதிப்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.