கொழும்பு நகர எல்லைக்குள் இருக்கும் பாடசாலைகளில் கண் நோய் பரவல் அதிகரித்து வருவதனால் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கான யோசனையினை கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களம் முன்வைத்துள்ளது.
இதன்படி, கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியின் மூன்று தரங்களில் உள்ள வகுப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடசாலையில் தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் அனைத்து வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நோயை பொதுவாக பிங்க் ஐ என அழைக்கப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் என கொழும்பு மாநகர சபை அடையாளம் கண்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு மற்றும் பொரளை பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது.
கொழும்பு மேற்கு, கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு மற்றும் பொரளை பிரதேசங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது.