தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரரை நேற்று சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
” நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டு வாழ்க்கை சுமை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சில் ஈடுபடுவேன்.
மக்களுக்கு ஏதாவதொரு வழிமுறையில் நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
நாட்டு மக்களின் அரசியல் தீர்மானத்தை அறிய அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது ஆரோக்கியமானதல்ல.
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.
தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படலாம். அதில் பிரச்சினையில்லை. தேசிய தேர்தல்களை இலக்காக கொண்டு இனி நாடளாவிய ரீதியில் செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் .”என மஹிந்த தெரிவித்துள்ளார்.