இலங்கையில் உள்ள மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை நிலையங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப நல சுகாதார பணியகத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட தரவு சேகரிப்பு பணிகள் அடுத்தமாதம் மேற்கொள்ளப்படுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் உதவியுடன் பல்வேறு முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச மையத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கரு, தாய் மற்றும் குழந்தைக்கும் ஏற்படும் சிக்கல்களை வைத்தியர்களினால் எதிர்காலத்தில் கணிக்க முடியுமென குடும்பநல சுகாதார நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.