சிறுநீரகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியமான உறுப்பு என்பதும் ரத்தத்தை வடிகட்டி செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்ற பொறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவை போல சிறுநீரக நோயும் மிகவும் பயங்கரமானது. சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல் கழிவுகள் ரத்தத்துடன் சிறுநீர் வந்தாலும், துர்நாற்றத்துடன் வந்தாலும் சிறுநீரக நோய் ஆரம்பிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி வந்தாலும் சிறுநீரகத்தை சோதனை செய்து கொள்வது நல்லது.
சிறுநீரகம் அமைந்துள்ள பின்பகுதியில் வலி அதிகமாக இருந்தாலும் சிறுநீரக செயல் இழப்புக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.