சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி குறித்த போட்டியில் போட்டியாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
சரிகமப ஜூனியர்
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, ஆர்வமாக பாடிய வருகின்றனர்.
இதில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி வருகின்றனர். அசானி ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சென்று கண்டி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
அசானியின் அப்பா, அம்மா, மூத்த சகோதரர் ஆகியோர் தேயிலை தோட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200க்கு வேலை பார்த்து வரும் நிலையில், மற்றொரு சகோதரர் டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகின்றார்.
வாணொளி மூலம் பாடல்களைக் கேட்டு பாடி பழகிய அசானி இன்று பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.
அசானி குறித்த மேடையில் சில வாரங்களுக்கு மட்டுமே பாடுவதற்கு அனுமதிக்கப்பட்டார். ஏனெனில் முறையான பயிற்சி எடுக்காததால் அவர் கற்றுக்கொள்ளும் மேடையாகவே இது இருந்தது.
கடந்த வாரம் ஒவ்வொரு பூக்களுமே சொல்கின்றதே என்ற பாடல் பாடிய போது உணர்ச்சிவசப்பட்டு இடையில் பாடலை பாடமுடியாமல் நிறுத்தினார்.
பின்பு சினேகன் அசானியை உற்சாகப்படுத்திய நிலையில், தற்போது இலங்கை பாராளுமன்றத்திலும் அசானி குறித்து பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இதனை குறித்த சரிகமபா மேடையில் போட்டு காட்டியதோடு, அசானி போட்டியாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்