யாழில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்று மாணவர்களை தெனிபகுதி சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு தங்குமிட வசதிகளை முன்பதிவு செய்யாமல் சென்றதால் விகாரை ஒன்றில் மாணவர்களை தங்கவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ் வடமராட்சி பகுதியில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றே இவ்வாறு முட்டாள் தனமாக செயல்பட்டுள்ளது. மாணவிகளை வேறுபகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துசெல்வதென்றால் , அதற்காக உணவு, தங்குமிடம் உள்ளிட்ட முன் ஆயத்த ஏற்பட்டுகளை செய்துவிட்டே அழைத்து செல்லவேண்டும்.
400 ரூபாவிற்காக விகாரையில் தங்க விட்ட அவலம்
எம்மவர் பகுதிகள் என்றால்கூட பரவாய் இல்லை. பெண் பிள்ளைகளைகளோ ஆண் பிள்ளைகளோ தெரியாத இடங்களுக்கு அனுப்புகையில் பெற்றோர் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும்.
நம் சமூகத்தில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் அந்தளவுக்கு மோசமானவையாக உள்ள நிலையில், ஒரு கல்வி நிலையத்தை நடத்தும் ஆசான், இது தொடர்பில் சிந்திக்காது செயல்பட்டதுதான் ஆச்சர்யமான விடயம்.
சுற்றுலா சென்றவர்கள் கண்டியில் உள்ள இந்துகலாச்சார மண்டபத்தில் தங்க இடம்கேட்க ஒரு பிள்ளைக்கு 400 ரூபா கேட்டதாக குறை கூறியுள்ளனர். ஆனால் விகாரையில் தங்க வைக்க கட்டணம் அறவிடவில்லை என்பதை மாணவர்களை அழைத்துசென்றவர் பெருமையாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாராம்.
இந்நிலையில் நம் பிரதேசத்திலே பிள்ளைகளுக்கு பாதுகாப்பு காணப்படாத இப்போதைய காலகட்டத்தில் , ஒரு விகாரையில் எப்படி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதோடு பிள்ளைகளிடம் சுற்றுலாவுக்கு பண்ம் அறிவிடுகையில், அவர்கள் பாதுகாப்பான முறையில் தங்கவைப்பதற்கும் ஏற்பாடு செய்துவிட்டே மாணவர்களை அழைத்துசெல்ல வேண்டுமெனவும், முட்டாள் தனமாக செயல்படும் இவ்வாறான ஆசிரியரை நம்பி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு அனுப்பிவைத்தார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.