போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதான இவர் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவரது கனேடிய விசா தொடர்பில் சந்தேகமடைந்த விமான அதிகாரிகள், அவர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், இந்த விசா மோசடியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குடிவரவு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.