உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோக அதிகரிப்பால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கச்சா எண்ணெய் விநியோகத்தை OPEC நாடுகள் கட்டுப்படுத்திவிட்ட நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஈராக் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்துள்ளதால், மீண்டும் கச்சா எண்ணெய் விநியோகம் வழமைக்கு திரும்பும் என கூறப்படுகிறது.
மேலும், சீனாவின் தேவை குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைவடையக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.38 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 80.65 டொலராகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.