இரண்டு முன்னணி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாயாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற அரசாங்க நிதிக் குழு, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அந்த குழுவின் பதில் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இந்தக் குழு நாடாளுமன்றில் அண்மையில் கூடிய போது, கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், ஜூன் 14, 2023 திகதியிடப்பட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வர்த்தமானியின் நோக்கங்கள் எட்டப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக, தற்போதுள்ள கோதுமை மாவின் இருப்புக்கள் குறித்த துல்லியமான தரவுகளை வழங்குமாறு குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.