அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.
இதற்கமைய 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி பாடசாலைகளுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாண்டிற்கான கற்றல் செயற்பாடுகள்
இதேவேளை பாடசாலைகளுக்கான இவ்வாண்டிற்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
அத்துடன் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இவ்வாண்டிற்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் அக்டோபர் மாதம் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்றும், மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும், மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.