சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் 5 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் 23ம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
யுவான் ஜியாஜுன் சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளராக பணியாற்றுவதுடன், சீன அரசியலில் அவரது முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.