தமிழ்நாடு -திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் ஹோட்டலில் வாங்கிய சாதத்தில் புழு இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆவடி அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் தனது உறவினர்களுடன் திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் உள்ள பெரம்பூர் ஸ்ரீனிவாசா உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளார்.
அப்போது சம்பார் சாதத்தில் புழு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் ஹோட்டல் மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து மேலாளர் தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு, மன்னிப்புக் கோரியதாக கூறப்படுகின்றது.