அரச மற்றும் வர்த்தக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொள்கை வட்டி வீதங்களின் குறைப்புக்கு ஏற்ப வட்டி வீதங்கள் குறைக்கப்படுவதால், அரச மற்றும் வர்த்தக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.
மத்திய வங்கியின் பொறுப்பு
அதனை ஒழுங்குபடுத்தும் நேரடி பொறுப்பு மத்திய வங்கிக்கு உண்டு.
அரச மற்றும் வர்த்தக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை என்றால், வங்கி முறையின் சிறப்பு நேரடி ஒழுங்குமுறையை செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த முடிவை எந்தவித சந்தேகமும் இன்றி செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்தமைக்காக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.