எந்நாளும் போலிப் பிரசாரங்களை மாத்திரம் முன்வைக்கும் எதிர்கட்சி மாயைகளை தோற்றுவிக்கும் முயற்சியில் தோல்வி கண்டுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌயிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வங்கிகள், ஊழியர் சேமலாப நிதியம் என்பன முடங்கிவிடும் என்ற போலி பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.
இருப்பினும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை நிதித்துறையின் முக்கியஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வோம் என குறப்பிட்டுள்ளார்.