முல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள எச்சங்களை அழிவடையாமால் பாதுகாக்க நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டி உள்ளனர்.
இதன் போது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கொக்கிளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தேய்விக்கப்பட்டுள்ளது.